Monday, December 12, 2011

வேட்டைக்கு தயாராகுங்கள்

ஒரு படம் உருவாகும்போது அது வெற்றிபெறவேண்டும் என இயக்குனரின் தவிப்பு சொல்லிவிடமுடியாதது. கூட இருந்து சிலர் கழன்றுகொள்ளும்போது அதே படைப்பை மிகச்சிறப்பாக கொண்டுவரவேண்டும் என்ற தவிப்பு வைராக்கியமாக மாறும். அத்தகைய வைராக்கியத்தினால் உந்தப்பட்டு நிச்சயம் இயக்குனர் லிங்குசாமி படத்தை செம்மைப்படுத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு சாக்லேட் ஹீரோ இருந்தாலே காலேஜ் பொண்ணுங்களுக்கு சொல்லவேணாம், இதுல ஆர்யா மாதவன்னு ரெண்டுபேரு. அதே மாதிரி, பசங்களுக்கு ஒண்ணுக்கு ரெண்டா அமலா பால, சமீரா ரெட்டின்னு ரெண்டு பேரு. எல்லாரும் சினிமா டயலாக்லதான் காட்டு காட்டுன்னு காட்டுவாங்க. இங்க இயக்குனர் லிங்குசாமி நட்சத்திரங்களோட எண்ணிக்கையிலேயே படம் எப்படி இருக்கும்னு காட்டிட்டார். வேட்டைக்கு குறிபார்த்தாகிவிட்டது. விரைவில் உங்கள் மனம்கவர்ந்த வேட்டை.

http://www.youtube.com/watch?v=bWkfp6tABm8

வேட்டை தகவல் மையம்.

திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் விதமாக ஒருபாடல் வெளியீடு எல்லா திரைப்படங்களுக்கும் தேவையான கவனிப்பை பெற்றுவிடுவதில்லை. மிகச்சில படங்களும் ஒருசில பாடல்கள் மட்டுமே அத்தகைய ஈர்ப்பை பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் வேட்டை படத்தின் அறிமுகமாக வெளியாகியிருக்கும் 'பப்பப்பப்பா பப்பப்பப்பான்' அடுத்த சென்சேஷன்.

குழுந்தைகளை ஒரு பாடல் கவர்ந்தால் அதன் வெற்றியை அளவிடமுடியாது. அதன்படி பார்த்தால் மேற்கூறிய பாடல் இன்னும் ஒரு வருடத்திற்கு குழுந்தைகளுக்கான ஆத்திச்சூடியாகப்போகிறது. எளிமையான ஆரம்ப வரிகள், ஆனால் ஒரே நொடியில் சர்ரென உச்சிக்கு ஏறும் பீட், ஆடத்தெரியாதவரையும் ஆடவைக்கும் தாளம், முத்துக்குமாரின் மன்மத வரிகள் என எல்லா தரப்பினரையும் குறிவைத்து வேட்டையாடப்போகிறது இந்தப்பாடல்.

பாடலைப்போலவே படமும் சரிவிகித கலவைகளோடு மனதை வேட்டையாடப்போவதில் ஐயமில்லை.

அந்தப்பாடல் உருவான விதத்தை யூட்யூபில் கண்டுகளிக்க
http://www.youtube.com/watch?v=0-Ao5IL6Q3k கிளிக் செய்யவும்.